திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (16:06 IST)

கலைஞர் பிறந்தநாளில் 5 திட்டங்கள் தொடக்கம் !

கலைஞர் பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று   5 திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.

ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் எனவே இன்று அவரது பிறந்தநாள் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி ஸ்டாலின்  5 திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

அவை:அர்ச்சகர்கள் பூசாரிகளுக்க், கோவில் பணியாளர்களுக்கு  ரூ.4000 ஊக்கத்தொகை, இந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ரேசனில் வழங்கும் 1 4வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்படும்.

ரேசனில் கொரொனா நிவாரணத் தொகையான மீதி ரூ.2000 வழங்கப்படுகிறது.

14 வகையான மளிகைப் பொருட்கள், 14வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் கடைகள் மூல ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தநிலையில், நேற்று முதல் சென்னையில் டோக்க விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 14 வகையான பொருட்கள் பின்வறுமாறு:

கோதுமை மவு -1 கிலோ
உப்பு 1 கிலோ
ரவை – 1 கிலோ
உளுத்தம் பருப்பு –  ½ கிலோ
சர்க்கரை  ½ கிலோ
புளி ¼ கிலோ
கடலை பருப்பு ¼ கிலோ
கடுகு 100 கிராம்
சீரகம் 100கிராம்
மஞ்சள் தூள் 100 கிராம்
மிளகாய் தூள் 1கிராம்
டீ தூள் இரண்டு பாக்கெட் 100கிராம்
குளியல் சோப் 1( 125 கிராம்)
துணி சோப்பு ( 1 (250 கிராம்)

ஆகியவை வழங்கும் திட்டமும்,கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு  நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் இன்று ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.