செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (18:09 IST)

டிடிஃப் வாசனுக்கு 4 வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

TTF Vasan
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

இந்த நிலையில்,  விபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட டிடிஃப் வாசனுக்கு 4 வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறையில் இருந்து காணொலி மூலம் காட்சி வழியே இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி வரையில் மேலும் 10 நாட்கள்  காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.