பிரபல நகைக்கடையில் 45 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ் – மேனேஜரின் லீலை !
சென்னையின் பிரபல நகைக்கடையான ஜி ஆர் டி நகைக்கடையில் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கையாடல் செய்ததாக அந்த கடையின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றான ஜி ஆர் டி கடை பல கிளைகளோடு இயங்கி வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள கிளை ஒன்றில் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போயுள்ளன.
இதுசம்மந்தமாக கிளையின் உதவி மேலாளர் பார்த்திபன், ஊழியர்கள் வெங்கடேஷ், நம்மாழ்வார் உள்ளிட்டோர் மீது தாம்பரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கணக்குத் தணிக்கையின் போது இந்த கையாடல் விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.