வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (19:27 IST)

வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா ஏலூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (63)  இவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் தினசரி வார சந்தையில் மளிகை சாமான் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் சந்தையில் வியாபாரம் முடித்து வீடு திரும்பியவர் இரவு வீட்டின் மாடியில் உள்ள வீட்டில் படுத்து குடும்பத்தினருடன் உறங்கி உள்ளார்.
கீழ் வீடு பூட்டப்பட்டிருந்தது.
 
காலை 5 மணிக்கு தங்கராசு எழுந்து வந்து கீழ் வீட்டை பார்த்த போது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது .அதிர்ச்சி அடைந்தவர்  உள்ளே சென்று பார்த்துள்ளார்.
வீட்டிலிருந்த இரண்டு பீரோக்கள் நெம்பி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 43பவுன் தங்க நகைகள், ஒன்னரை லட்சம் ரூபாய் ரொக்க பணம் திருட்டுப் போயிருந்தது.
இதுகுறித்து தங்கராசு காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
 
தடவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. திருச்சி நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 43 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.