வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (12:29 IST)

அடகு கடையில் 300 சவரன் நகை கொள்ளை..! சுவரை துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை..!!

Theft
சிவகங்கை அருகே  தனியார் அடகு கடையின் சுவரை துளையிட்டு 300 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சிவகங்கை அருகே உள்ள மதகுப்பட்டியில் தச்சம்புதுப்பட்டு சாலையில் பாண்டிதுரை என்பவர் ஏழுமலையான் பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகுகடையின் பின்புற சுவற்றில்  மர்ம நபர்கள் துளையிட்டு உள்ளே புகுந்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 300 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்,  சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று அடகு கடையின் காவலாளி விடுப்பில் சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சிபி சாய் சவுந்தர்யன், காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே மதகுப்பட்டி காவல் நிலையத்தில் இரவு நேரப்பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ மற்றும் காவலர் ஆகிய இருவரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.