திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 5 டிசம்பர் 2020 (11:18 IST)

கனமழையால் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்… மின்சாரம் தாக்கி பலியான சிறுவன்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாத்தபாடி கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 4 வயது சிறுவன் வெள்ளநீர் புகுந்த குடிசை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். இது அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.