வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:24 IST)

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை!

chennai
மிக்ஜாம் புயல் சென்னை மாநகரைப் புரட்டி எடுத்துள்ள நிலையில், இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னை பெருங்குடியில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 2 நாட்களில் 74 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. நேற்று ஒரே நாளில் 4  செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் பகுதிவாரியாக அமைச்சர்களையும், ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வெள்ள   நிவாரன பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த 1 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் கரையைக்க் கடக்கிறது. ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற இடத்தில் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பலத்த காற்றுடன் அங்கு கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை( டிசம்பர் 6)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.