திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2017 (11:51 IST)

கோவையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

கோவையில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ரவிசங்கர்(50) என்பவர் ‘ஸ்ரீபத்மராஜா ஜூவல்லரி’ என்ற பெயரில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். தங்க நகைகளை சுத்தப்படுத்தும் தொட்டியிலிருக்கும் னைட்டிச் ஆசிட்(NITRIC ACID)  கழிவுகளை அகற்ற  கவுரிசங்கர்(21), ஏழுமலை(23) ஆகியோர் சின்டெக்ஸ் தொட்டியில் இறங்கினர். எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி அவர்கள் இருவரும் தொட்டியினுள் மயங்கி விழுந்தனர். அவரை காப்பாற்ற சென்ற  சூர்யா(23) என்பவரும் மயங்கி விழுந்தார். கவுரிசங்கர் மற்றும் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.