வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (11:45 IST)

தவெக செயற்குழு: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு உள்பட 20 தீர்மானங்கள்..!

Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது அவற்றில் சில என்னவென்று பார்ப்போம்.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு  

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்

சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில்,  மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு எதிர்ப்பு

மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்

கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்

Edited by Siva