செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (11:53 IST)

மதுவுக்கு பதில் மெத்தனால் குடித்த 2 பேர் பலி, ஒருவருக்கு பறிபோன கண்பார்வை

மதுவுக்கு பதில் மெத்தனால் குடித்த 2 பேர் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதிலும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தொழில்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து ஒரு சில நிபந்தனைகளுடன் ஏப்ரல் 20ம் தேதி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் கட்ட ஊரடங்கு தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டது. இதனால் மதுவுக்கு அடிமையானவர்கள் மிகுந்த திண்டாட்டத்தில் உள்ளனர். ஒரு சிலர் மதுவுக்கு பதிலாக மாற்று மருந்தை குடித்து உயிரிழந்து வருவதும் வருத்தத்திற்குரிய செய்தி களாக உள்ளன 
 
இந்த நிலையில் கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கண்பார்வை பறிபோன பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. எனவே மதுவுக்கு பதிலாக மாற்று மருந்துகளை குடிக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அது உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்த வேண்டும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்