1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (20:46 IST)

தமிழகத்தில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்.! எங்கெல்லாம் தெரியுமா.?

தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F  வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர்.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்றும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பமானது பதிவாகி உள்ளது. 

 
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 100.94°F, கோயம்பத்தூர் 102.56°F, தர்மபுரி 105.8°F, ஈரோடு 107.6°F, கரூர் பரமத்தி 106.7°F, மதுரை நகரம் 105.8°F, மதுரை விமான நிலையம் 103.82°F, நாமக்கல் 104.9°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.88°F, திருச்சிராப்பள்ளி 104.18°F, திருத்தணி 103.64°F, வேலூர் 106.7°F, பாளையங்கோட்டை 102.2°F வெப்பமானது பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.