சரணடைந்த விஜய்க்கு 15 நாள் சிறை..
பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியில் சுடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய் சரணடைந்த நிலையில் அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் சுடப்பட்ட வழக்கில் அவரது நண்பர் விஜய்யை போலீஸார் தேடி வந்த நிலையில், விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் சரணடைந்த விஜய்யை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஜய்யிடம் விசாரணை நடத்திய போது முகேஷ் உயிரிழக்க காரணமான துப்பாக்கி 2 ஆண்டுகளுக்கு முன் குப்பை தொட்டியில் இருந்து கிடைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கியை 2 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளி பண்டிகையின் போது வெளியே எடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.