வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (08:59 IST)

நிரம்பிய 148 ஏரிகள்: காஞ்சிபுரம் & செங்கல்பட்டில் உஷார் நிலை!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள 148 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது மழையின் காரணமாக 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியாகும். இதைத்தவிர்த்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள 148 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
அதாவது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ள நிலையில் இதில் 148 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதனால் மேலும் நிவர் புயல் காரணமாக மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.