டாஸ்மாக் ஊழியர்கள் 14 பேர் சஸ்பெண்ட்: என்ன காரணம்?
கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்த 14 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்,.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபான விலையை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் விலை உயர்த்தப்பட்டது மட்டுமன்றி கடை ஊழியர்கள் கூடுதலாக பணம் வசூலிக்க வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென பறக்கும் படையினர் சென்னை டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்தபோது கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 14 ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கற்பகவல்லி கூறியுள்ளார்
மேலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்