செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (15:35 IST)

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு?? – இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மெல்ல உயர்வை சந்தித்து வந்த நிலையில் அதிகபட்சமாக ரூ.110 ஐ தாண்டியது. பின்னர் பெட்ரோல் டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்ட நிலையில் விலை சற்று குறைந்தது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் போரால் உலக அளவில் கச்சா எண்ணெய் பேரல் விலை வேகமாக அதிகரித்து 139 டாலராக உள்ளது. ஆனாலும் இந்தியாவில் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு விலை ஏற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.

தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் ஒரேயடியாக அறிவிக்காமல் நாளொன்றுக்கு 50 காசுகள் என மெல்ல அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.