கஞ்சா போதையில் 12ஆம் வகுப்பு மாணவன்.. 10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை..!
12ஆம் வகுப்பு மாணவன் கஞ்சா போதையில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி பகுதி சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த மாணவன் தனது பெற்றோரிடம் சொல்ல போவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் 10ஆம் வகுப்பு மாணவனை நைசாக பேசி அழைத்துச் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டதாக தெரிகிறது. தனது மகனை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சி மூலம் இருவரும் சேர்ந்த காட்சிகளை அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டது
அப்போது அவர் 10ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அந்த மாணவனிடம் மேலும் விசாரணை செய்தபோது அவர் எப்போதும் கஞ்சா போதையில் இருந்தது.
கஞ்சா போதையில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva