1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 22 மார்ச் 2023 (18:11 IST)

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது!

சென்னையில் நடந்து வரும்  இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

இன்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான 3 -வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரு போட்டிகளில் இரு அணிகளும்1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ள நிலையில்,இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  இன்றைய 3 வது ஒரு நாள் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டிய நிலையில்,  இன்று காலை முதல் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.  அப்போது, பிளாக்கில் சிலர் டிக்கெட் விற்பதாக போலீஸாருக்கு தகவல் வெளியானது.

இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் சோதனை நடத்தினர். அதில்,பிளாக்கில் டிக்கெட் விற்றதாக 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 30 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.