புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:09 IST)

சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று ஒரே நாளில் 12 மாணவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Chennai IIT
சென்னை ஐஐடியில் ஏற்கனவே 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 12 மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது என்றும்m ஏற்கனவே படிப்படியாக அதிகரித்து 18 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபப்ட்ட நிலையில் இன்று மேலும் 12 மாணவர்களுக்கு ஒரு உறுதி செய்யப்பட்டுள்ளது ஏற்படுத்தப்பட்டு வளாகத்தில் முப்பது பேர்களுக்கு பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இதுவரை சென்னையில் உள்ள 700 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பரிசோதனை யை அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது