திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (17:54 IST)

11 முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா? துண்டு துண்டாக சிதறும் அதிமுக?

ADMK
அதிமுகவின் 11 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் சில பிரபலங்கள் இன்னும் ஒரு சில வாரங்களில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பிரிவு, ஓபிஎஸ் பிரிவு, தினகரன் பிரிவு, சசிகலா பிரிவு என நான்காக உடைந்து உள்ளது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி பிரிவுதான் அதிமுக என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பதும் கட்சி சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிச்சாமி பிரிவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பாஜக தனது வழக்கமான பாணியை தொடங்கிவிட்டது.

அதிமுகவை இன்னும் துண்டு துண்டாக சிதறு தேங்காய் போல் உடைப்பதற்காக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் 11 பேருக்கு தூது விட்டு இருப்பதாகவும் அவர்களும் பாஜகவின் இணைய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அதிமுகவில் உள்ள சில பாஜக ஆதரவாளர்களும்  கட்சி மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Mahendran