வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:48 IST)

சென்னையில் மின் விநியோகத்தை சீரமைக்க 1000 ஊழியர்கள்! அமைச்சர் தகவல்!

சென்னையில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மின் விநியோகத்தை சீரமைக்க 1000 ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக 8 மணிநேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று மட்டும் சுமார் 20 செமீ மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டை சரிசெய்து மின் விநியோகத்தைக் கொடுக்க சுமார் 1000 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.