வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (09:33 IST)

100 பவுன் நகையை மனைவியே திருடிவிட்டு நாடகம்: தூத்துகுடி கொள்ளையில் திடீர் திருப்பம்

100 பவுன் நகையை மனைவியே திருடிவிட்டு நாடகம்:
தூத்துக்குடியைச் சேர்ந்த துறைமுக அதிகாரி ஒருவரின் வீட்டில் நேற்று 100 பவுன் தங்க நகை திருடு போனதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து இந்த சம்பவத்தில் அவருடைய மனைவியே நகைகளை திருடி நாடகமாடி உள்ளதாக தற்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
தூத்துக்குடியை சேர்ந்த தாளமுத்து நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் பெரிய செல்வம். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர் 
 
இந்த நிலையில் நேற்று திடீரென நேற்று பெரிய செல்வம்வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடு போய்விட்டதாக வெளி வந்த தகவலை அடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பெரிய செல்வம் மனைவி ஜான்சிராணி இடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக சில தகவல்களை கூறியது தெரியவந்தது
 
இதனை அடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்த போது நகைகளை திருடி அருகில் உள்ள ஒரு இடத்தில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார். கணவர் செலவுக்கு கூட பணம் தராமல் கஞ்சத்தனம் செய்ததால் செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக நகைகளை திருடியதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்திராணியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சொந்த வீட்டிலேயே 100 பவுன் தங்க நகையை திருடிவிட்டு நாடகமாடிய பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது