செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:29 IST)

நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை..!

நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு 10  வேலை நாட்களை குறைத்து திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளி கல்லூரி துறையால் சற்றுமுன் வெளியிட்டு உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் 220 நாட்கள் என வேலை நாட்கள் இருந்த நிலையில் இந்த வேலை நாட்களை குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு அதன் பின் தற்போது பத்து வேலை நாட்கள் குறைத்து, நடப்பு கல்வி ஆண்டில் 210 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும் என்ற வகையில் திருத்தப்பட்ட புதிய நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் பள்ளிக்கல்வி துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகள் 10 வேலை நாட்கள் குறைக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran