செக்ஸ் தொல்லை கொடுத்த திருநங்கை; குத்திக் கொன்ற காதலன்
சென்னை அருகே செக்ஸ் தொல்லை கொடுத்த திருநங்கையை கத்தியால் குத்திக் கொன்ற முன்னாள் காதலன் காவல்துறையில் சரணடைந்தார்.
சென்னை திருவொற்றியூர், தாங்கல் சதானந்தபுரத்தை சேர்ந்தவர் மகபூர்பாஷா (40). திருநங்கை. இவருக்கும், தாங்கல் புதிய காலனியை சேர்ந்த ஆரோக்கியராஜுக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்தது.
கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ஆரோக்கியராஜுக்கு திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் திருநங்கை மகபூர்பாஷாவுடனான பழக்கத்தை தவிர்த்தார்.
ஆனாலும் ஆரோக்கியராஜ் மீது மோகம் கொண்ட மகபூர்பாஷா அவ்வப்போது வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்தார்.
நாளுக்கு நாள் தொல்லை அதிகரிக்கவே மகபூர் பாஷாவை கொலை செய்ய ஆரோக்கியராஜ் முடிவு செய்தார். இன்று காலை மகபூர்பாஷா வீட்டிற்கு அவர் சென்றார். அப்போது ‘‘அடிக்கடி வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருக்க வேண்டும்’’ என்று ஆரோக்கியராஜுக்கு அவர் நிபந்தனை விதித்தார். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ஆரோக்கியராஜ் ஏற்கனவே கொண்டு சென்ற கத்தியால் மகபூர்பாஷாவை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ரத்தக்கறை படிந்த கத்தியுடன் ஆரோக்கியராஜ் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். செக்ஸ் தொல்லை கொடுத்த திருநங்கையை குத்தி கொன்றதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் கிடந்த திருநங்கை உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநங்கை கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் அந்த வீட்டு முன்பு ஏராளமான அரவாணிகள் கதறி அழுதபடி திரண்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.