1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (10:48 IST)

காடுவெட்டி குருவுக்கு சொந்த ஊரில் மணி மண்டபம்!

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மறைந்த காடுவெட்டி குருவுக்கு சொந்த ஊரில் நினைவிடமும், மணி மண்டபமும் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.


 
 
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் எம்.எல்.வுமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25-ந்தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
 
இவரது நினை வேந்தல் நிகழ்ச்சி புதுவையில் உள்ள பட்டானூரில் பாமக சார்ப்பில் நடைபெற்றது. இதில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே மணி ஆகிய முக்கய தலைவர்களும், கட்சியின் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசியிருப்பதாவது:-
 
“கட்சியில் அதிக ஈடுப்பாட்டுடன் செயல்பட்டதால் குரு தனது உடல்நலத்தை சரியாக கவனிக்கவில்லை. இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல நினைத்தோம். ஆனால், அதற்கு அவரது உடல் நிலை ஒத்துழைப்பு தரவில்லை. அவரை இழந்ததால் எனது சொந்த சகோதரனை இழந்த உணர்வில் இருக்கிறேன். 
 
காடுவெட்டி குருவுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடமும், மணி மண்டபமும் கட்டப்படும். கோனேரி குப்பத்தில் உள்ள கல்லூரியில் அவருக்கு சிலை அமைக்கப்படும்” என அறிவித்தார்.