Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை மகள்

Updated: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (15:23 IST)
 
பிறகு 
 
இந்த வெள்ளை நிறமும் 
உதட்டுச் சிவப்பும்
நிமிர்ந்த கொங்கையும்
முகவடிவுமே
எனக்கு துரோகிகள்
 
வளைந்து கொடுக்க முடியாது
முறிந்து கொடுக்கவும் முடியாது 
திமிறிய கணங்களில் 
 
ஒவ்வொன்றாய் வந்த 
வெறி நாய்கள் 
என்னை சுவைத்து ஏப்பமிட்டன
 
அட போங்கடா
 
ஒரு நாளில் 
எத்தனை பேருடன் 
வியர்வை நாற்றம் நுகர்ந்து 
ஈடுகொடுக்க முடியும் 
 
இல்லை 
 
என்னுறுப்பு ரப்பரால் செய்யப்பட்டதா? 
 
முகம் தெரியாதவன் 
மொழி தெரியாதவனிடமிருந்தெல்லாம்
எப்படி நான் மீள்வது 
 
ஒவ்வொருவனின் வர்ணனைக்கும்
ஒவ்வொருவனின் ரசனைக்கும்
உடன்படவில்லையெனில்
காயங்களும் கீறல்களுமே எஞ்சும்
 
ஒரு தலைவலிக்கு
மாத்திரைகள் இல்லை 
மாதவிலக்கிற்கும்
நாப்கின்கள் இல்லை 
 
அப்படி என்னடா 
பெண் சுகம் கண்டு விட்டீர்கள் 
தேவடியா பயல்களா
 
இல்லை நான் 
விட்டு விடுங்களென்றால்
விட்டு விடவா போகிறீர்கள்? 
 
என் தூக்கம் கனவு ஆசை அனைத்தையும் 
காசாக்கிவிட்டீர்களே
என் மகிழ்ச்சி கோபம் சிரிப்பு 
யாவையுமே
வடிகட்டி குடித்துவிட்டீர்களே
 
இனி எனக்கிருப்பது
வெறும் எலும்புக்கூடும் தோலும்தானே
 
அல்லது 
என் வாழ்க்கை 
யாரோ ஒரு முகம் தெரியாதவனிடமிருந்து
கிடைக்குமா?
 
-கோபால்தாசன்

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments