புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  3. முந்தைய தேர்தல் முடிவுகள்
Written By
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (10:51 IST)

1989 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் : ஒரு பார்வை

தமிழகத்தின் 9 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 1989  ஆம் ஆண்டு நடைபெற்றது.  234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக வெற்றிப் பெற்றது.  கலைஞர் 3 வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
 
திமுக மொத்தம்  150     தொகுதிகளில் வென்றது.
 
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜெ அணி என்றும் ஜானகி அணி என்றும் இரு அணிகள் இருந்தன. 
 
1989 தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. திமுக - ஜனதா தளம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக (ஜெ) - இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக (ஜா) - தமிழக முன்னேற்ற முன்னணி, காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. 
 
ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின.  மார்ச் 11 ஆம் நாள் வாக்கு என்ணிக்கை நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒன்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெர்று 13 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் முதல்வராக கருணாநிதி பதவியேற்றார்.