Daily Horoscope
✕

நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 9, 18, 27

Written By Sasikala
Updated: திங்கள், 2 நவம்பர் 2020 (10:11 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...


எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு  கிடைக்கும். நீண்ட  தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். 

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில்  முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்  மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம்  முன்னேற்றம் அடையும். புதிய தொழில்  அல்லது  வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு  இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான  காரியங்களையும்  எளிதாக செய்து முடிப்பீர்கள்.
 
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments