Daily Horoscope
✕

நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 8, 17, 26

Written By Sasikala
Updated: திங்கள், 2 நவம்பர் 2020 (10:08 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

பழமையான நம்பிக்கைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச்செலவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்   ஏற்படலாம்.  தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல்   ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை  ஏற்படலாம்.

பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு  ஆளாக நேரலாம். தொழில் வியாபாரம்  தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும். வாக்கு  வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புதிய  நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல்வதிகள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம்.   சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 
 
பரிகாரம்: சிவன் கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனை பூஜித்து வணங்கி வர காரியங்கள் சாதகமாக முடியும்.  கடன் பிரச்சனை தீரும். 

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments