திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (10:05 IST)

நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
வாழ்வில் வெற்றி தோல்விகளை சரிசமமாக பாவிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். துணிச்சலுடன் எதிலும்  ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது.  பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.  வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள்  எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. 

கலைத்துறையினருக்கு வீண்  அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். காரிய அனுகூலம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு  கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும்.  நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,
 
பரிகாரம்: முன்னோர்களை தினமும் வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் சுமூக முடிவு ஏற்படும். காரிய தடைகள் நீங்கும்.