1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
  4. November month numerology prediction

நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 2, 11, 20, 29

நவம்பர்
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
குடும்பத்தின் மீது பாசம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வெற்றி கிடைப்பதில் இருந்த தடை தாமதம்  நீங்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.  குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.

கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது  நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான  நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். பெண்கள்  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும்.

 அரசியல்துறையினருக்கு  எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில்  முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. 
 
பரிகாரம்: வாராகி தேவியை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30