வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (09:57 IST)

நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
உண்மையை உரக்க சொல்லும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத  பொருள் இழப்பும் இருக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். தொழில் வியாபாரம்  தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். மேலிடம் உங்களுக்கு அனுக்கூலமாக இருக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. 

அரசியல்துறையினருக்கு  மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார  முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.  விளையாட்டுகளில் 
 
பரிகாரம்: இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி நவக்கிரக ராகு பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.