திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sasikala

நவம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
நேர்மையுடன் செயல்பட்டு வாழ்வில் ஜொலிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம்  உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கு வன்மை  அதிகரிக்கும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து  கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம்  கிடைக்கும்.

பெண்கள் தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.  கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.

அரசியல்வாதிகள் வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும்.  கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள்  கிடைக்கும்.
 
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.