1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (13:14 IST)

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.


மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும்.

மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.

அரசியல்துறையினர் உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சிவபுராணம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.