1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (13:07 IST)

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அசத்தலான நடை உடை பாவனையுடன் ஆடம்பரமாக வாழும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும்.


எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.

கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள்.

அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்படுபவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.

பெண்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7
பரிகாரம்: பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.