1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (13:05 IST)

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய ஐந்தாம் எண் அன்பர்களே


இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கலைஞர்கள் பொருளாதார வகையில் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள்.

அரசியல்துறையினர்  உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள்.

பெண்கள் நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், சனி
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6
பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.