Daily Horoscope
✕

டிசம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 8, 17, 26

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (09:08 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த கடினமான சூழ்நிலையையும் புன்சிரிப்புடன் எதிர்கொள்ளும் எட்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த சோதனைகள் மாறும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம்  அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். 
 
பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமை கஞ்சி செய்து பிரசாத விநியோகம் செய்வது நல்லது. 

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments