வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (09:05 IST)

டிசம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த குழப்பத்திலும் தெளிவான முடிவுகளை எடுக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். பெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
 
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.