Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான கிராமத்து கோழிக் குழம்பு செய்ய..!!

Updated: புதன், 1 மே 2019 (14:00 IST)
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 1(முழு)
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமானால் சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை மற்றும் கிராம்பையும் போடவும். சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
 
வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி கோழிக்கறி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும்.
 
கறி நன்கு வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காயை போட்டு வதக்கி, கறி முழ்கும் அளவு நீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியாக  வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போடவும். சுவையான கிராமத்து கோழிக் குழம்பு தயார்.
 
குறிப்பு: தேங்காய் பதிலாக தேங்காய்ப் பாலும் ஊற்றி கோழி குழம்பு செய்யலாம். மிகவும் ருசியாக இருக்கும், ஆனால் அதில் கொழுப்பு சத்து  அதிகம் உள்ளது. கவனமாக இருக்கவும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments