Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த கொத்தமல்லி சிக்கன் செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 6 மார்ச் 2021 (13:15 IST)
பச்சை மிளகாய் - 4
தயிர் - 250 மில்லி லிட்டர்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:
 
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கொத்தமல்லி இலை, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.
 
இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் பச்சைமிளகாய், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும். சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
 
மீதமுள்ள மிளகாய் தூள், தயிரை சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும். அடுத்து மூடி போட்டு சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சுவை மிகுந்த கொத்தமல்லி சிக்கன் தயார்.

எல்லாம் காட்டு

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments