1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (15:38 IST)

கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வர கிடைக்கும் நன்மைகள் என்ன?

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை அதிகரிக்கும்.
 
உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும் கேழ்வரகில் இருக்கும் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவும் மற்றும் கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து.
 
கால்சியம் சக்தி பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது.கேழ்வரகில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால்,எலும்புகள்  வலுப்படும்.
கேழ்வரகில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் கேழ்வரகில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.
 
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி,  கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
 
கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை அதிகரிக்கும். கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்தம்,  இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும்.
 
கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.