செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சூப்பரான சுவையில் சிக்கன் மஞ்சூரியன் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
கோழிக்கறி - 400 கிராம் 
முட்டை - 1
கார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று 
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
 
கோழிக் கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அத்துடன் 4 மேசைக்கரண்டி  கார்ன்ஸ்டார்ச், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதனை நன்கு  பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். 
 
வெங்காயத்தை தோலுரித்து மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினையும் தோலுரித்து பொடியாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். 
 
குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும்  நீளவாக்கில் குறுக்காக வெட்டிக் கொள்ள வேண்டும். மீதமுள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். 
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப்  பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து விட வேண்டும். மற்றொரு வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கின இஞ்சி  பூண்டினைப் போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க  வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, ஸ்டாக், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். 
 
பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலக்கி வேகவிட வேண்டும். அதில் நறுக்கின குடை மிளகாய், வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இறக்குவதற்கு  முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.