Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுறா புட்டு செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: சனி, 20 ஜூன் 2020 (13:26 IST)
தண்ணீர் - 2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 14 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி, பூண்டு - கால் கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 5
மிளகு தூள் - 1 தேக்கரண்டி.

செய்முறை:
 
சுறா மீனை தோல் நீக்கி சுத்தம் செய்து 2-3 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கி  விடவும். பின்னர் நீரை வடிகட்டி மீன் துண்டுகளை எடுத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து பின் பொடியாக நறுக்கி பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 
அத்துடன் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து மசாலா நன்கு மீனில் சேரும் வரை நன்கு கிளறவேண்டும். நன்கு உதியாக வந்ததும் மிளகுத்தூள் கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி கிளறி விட்டு இறக்கினால் சுவையான சுறா புட்டு தாயார்.
 
குறிப்பு: தேவைப்பட்டால் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். மற்றொன்று சுறாவை குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்திலும் வேகவைக்கலாம்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments