Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மட்டன் நெஞ்சு எலும்பு சூப் செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: வியாழன், 21 நவம்பர் 2019 (13:17 IST)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம், மிளகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - சிறிது
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
 
மட்டன் நெஞ்சு எலும்பை நன்றாக கழுவி கொள்ளவேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
இஞ்சி, பெருஞ்சீரகத்தை(சோம்பு) ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காஉந்ததும் அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்சு எலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் போட்டு 1  லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
 
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம்  மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். உடலுக்கு வலு சேர்க்கும் மட்டன் நெஞ்சு எலும்பு சூப்  தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments