சோயா பீன்ஸ் கொண்டு கிரேவி செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: திங்கள், 11 ஜூலை 2022 (11:05 IST)
தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் மணிகள் - 2 கப் (ஊற வைத்தது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்



செய்முறை:

முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி வேகவைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் கிரேவி தயார்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments