சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்: 
 
இறால் - 100 கிராம்
முட்டை - 2
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - சிறிதளவு
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
 
முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி  நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி  கொள்ளவும்.
 
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
 
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி  பரிமாறவும். சுவையான இறால் முட்டை பொடிமாஸ் தயார்.

எல்லாம் காட்டு

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments