வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:10 IST)

எளிதான மற்றும் சுவையான முறையில் இறால் வறுவல் செய்ய !!

Prawn Fry
தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்
வெங்காயம் - 2 பெரிய
பூண்டு - 6 பல்
இஞ்சி - 2 துண்டு
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 4 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
மிளகு - 2 மேசைக்கரண்டி
துண்டு - 2 பட்டை
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு



செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். அடுத்ததாக இன்னுமொரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், மற்றும் மிளகை போட்டு அதை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

பின் வறுத்த பொருட்களை ஆற விட்டு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், கராம்பு, மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். பின்னர் இறாலை போட்டு அது நன்கு வெங்காயத்துடன் சேருமாறு அதை கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

5 நிமிடத்திற்கு பிறகு கறிவேப்பிலையை தூவி, கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு இறால் வறுவல் தயார்.