1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

தேங்காய்ப் பால் சிக்கன் கிரேவி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
மிளகுத்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய் பால் - ஒரு கப்
கறிவேப்பிலை, மல்லி - தேவையான அளவு 
செய்முறை:
 
சிக்கனை பொடியாக நறுக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். 
 
பின்னர் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி சிறிது நேரம் வேக விடவும். வெந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து  கிளறவும். இதில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு மிளகுத்தூள், சீரகத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
 
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேகவிடவும். 10 நிமிடம் கழித்து, சிக்கன் வெந்ததும் தேங்காய் பாலை சேர்க்கவும். சிக்கன்  கிரேவியாக வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான். தேங்காய் பால் சிக்கன் கிரேவி தயார். இவை சாதம் மற்றும் டிபன்  வகைகளுக்கு ஏற்ற துணை உணவாக இருக்கும்.