புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசி பூ - சிறிதளவு
மிளகாய் பொடி - 3 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
 
அரைக்க வேண்டிய பொருட்கள்:
 
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 15 பல்
கிராம்பு - 3
 
வறுத்து பொடியாக அரைக்க:
 
சோம்பு - 2 ஸ்பூன்
சீரகம் - 3 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
 
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை அதாவது சோம்பு போட்டு வறுத்து அதன் பின் சீரகம் பின் மிளகு போட்டு கருக விடாமல் வறுக்கவும்.பின் அதை ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

 
செய்முறை:
 
சிக்கனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  அதன் பின்பு அரிது  வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, கிராம்பு கலவையை போட்டு வதக்கவும்.
 
பின் வறுத்து பொடியாக வைத்துள்ள சீரகம், சோம்பு, மிளகு கலவையையும் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். செட்டிநாடு சிக்கன் கிரேவியின் சிறப்பே இது தான். பின் சிக்கனை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
 
அதன் பின் மேலே கூறிய பொடி வகைகளையும் போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சிக்கன் முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும். சிக்கன் வெந்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு பின் கிரேவி பதம் வந்தவுடன்  இறக்கவும்.