வேன்-பேருந்து மோதல்: 3 அயல்நாட்டினர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே வேனும், ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 அயல்நாட்டினர் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மலேசியாவை சேர்ந்த ஜூலியனா பிரேமா (42), அவரது கணவர் சுகுமாறன் (52), உறவினர் மீனாட்சி (55) ஆகியோர் ஒரு வேனில் பரமக்குடியில் இருந்து நாகப்பட்டிணத்துக்கு இன்று காலை சென்று கொண்டிருந்தனர். வேனை சீனிவாசன் (55) என்பவர் ஓட்டிச் சென்றார்.
புதுக்கோட்டை அருகே உள்ள மலையாடு கிராமத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்து ஒன்று வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் இருந்த 3 அயல்நாட்டினர், வேன் ஓட்டுனர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.