1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

2வது டெ‌ஸ்‌ட் ‌சி‌றிசா‌ந்‌த், ஆ‌ர்.‌பி.‌சி‌ங் ‌கிடையாது!

இரண்டாவது டெஸ்ட் பாகிஸ்தானுக்கு ‌சி‌றிசாந்த்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ‌சி‌றிசாந்த், ஆர்.பி.சிங் ஆ‌கியோ‌ர் இடம்பெற மாட்டார்கள் என்று இ‌ந்‌தியா கிரிக்கெட் வாரிய செயலாள‌ர் ‌நிர‌ஞ்ச‌ன் ஷா தெரிவித்துள்ளது.

இ‌ந்‌திய வே‌க‌ப்ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர்க‌ள் ‌சி‌றிசா‌ந்‌த், ஆ‌ர்.‌பி.‌‌சி‌ங் தோ‌ள்ப‌ட்டை, தடை‌ப் ‌‌பிடி‌ப்பா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் டெல்லியில் நடைபெறும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்த இருவரும் இட‌ம் பெற முடியாம‌ல் போனது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

‌சி‌‌றிசாந்த், ஆ‌ர்.‌பி.‌சி‌ங் ஆ‌கியோரு‌க்கு காய‌ம் முழுமையாக குணமாகாததா‌ல் அவ‌ர்க‌‌ள் டெ‌ஸ்‌ட்‌டி‌ல் சே‌ர்‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று மேலு‌ம் ‌நிர‌‌ஞ்ச‌ன் ஷா கூ‌றியு‌ள்ளா‌ர்.